மம்தா பானர்ஜி அரசியல் நாடகம் ஆடுவதாக பாஜக குற்றச்சாட்டு
ஒரு சிறிய சாதாரண விபத்தை ஏதோ திட்டமிட்ட பெரிய சதி போல சித்தரிக்க மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் என மேற்கு வங்க பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.
நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற மம்தா, தம்மை விஷமிகள் சிலர் தாக்கியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தா மருத்துவனையில் சிகிச்சை பெறும் அவருக்கு உடலில் சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, இந்த சம்பவத்தை வைத்து அரசியல் அனுதாபம் தேட மம்தா முயற்சிப்பதாக கூறியதுடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். நந்திகிராமில் தமக்கு வெற்றி வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்டதால், அனுதாபம் மூலம் வாக்குகளை பெற, மம்தா நாடகம் ஆடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் குற்றம் சாட்டி உள்ளார்.
Comments