திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு?

0 6282
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு?

நீண்ட இழுபறிக்கு பின்னர், திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், தொகுதிகளை இறுதி செய்வதற்கான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில், பவானிசாகர், வால்பாறை, திருப்பூர் வடக்கு, சிவகங்கை, திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

 விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 4 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய 2 தொகுதிகள் குறித்து இன்று முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர, காங்கிரஸ் கட்சியினரோடு தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

 திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என கூறப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்குதொகுதிகளை அடையாளம் காணுவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. இன்று மாலைக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்றே வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments