கரீபியன் நாடுகளில் ஒன்றான பஹாமஸ் அருகே தனியார் தீவு ஒன்று விற்கப்படுவதாக அறிவிப்பு

0 2117
கரீபியன் நாடுகளில் ஒன்றான பஹாமஸ் அருகே தனியார் தீவு ஒன்று விற்கப்படுவதாக அறிவிப்பு

கரீபியன் நாடுகளில் ஒன்றான பஹாமஸ் அருகே உள்ள தீவு ஒன்று விலைக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஆண்ட்ரூஸ் எனப்படும் லிட்டில் ராக்ட் தீவு சுமார் 730 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

சிறிய மலைகள், பசுமையான மருத்துவ குணம் கொண்ட லிக்னம் விட்டே காடுகள், ஏராளமான மீன் வளங்கள், அதனை வேட்டையாட வரும் பிளமிங்கோ பறவைகள் ஏராளமான இயற்கை அம்சங்களை தன்னகத்தே கொண்டது லிட்டில் ராக்ட் தீவு.

அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனமான கான்செர்ஜ் என்ற நிறுவனம் சார்பில் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தீவு ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் அளவிற்கு ஏலம் போகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments