அர்ஜென்டினாவில் பற்றி எரியும் காட்டுத் தீ

0 940
அர்ஜென்டினாவில் பற்றி எரியும் காட்டுத் தீ

அர்ஜென்டினா நாட்டின் சுபுட் மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

சுபட் மாகாணத்தில் உள்ள வனப் பகுதியில் திடீரென பற்றிய காட்டுத் தீ நாலாபுறமும் வேகமெடுத்து பரவி வருகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறி வருவதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

வனப் பகுதியில் பற்றிய தீ குடியிருப்பு பகுதிகளில் புகுந்த நிலையில் அனல் தாங்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். தீ பற்றியதற்கான காரணம் தெரிய வராத நிலையில் உள்ளூர் தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments