புதுச்சேரியில் காங்கிரஸ் 17 இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும் போட்டியிடும் எனத் தகவல்

0 2158
புதுச்சேரியில் காங்கிரஸ் 17 இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும் போட்டியிடும் எனத் தகவல்

புதுச்சேரியில் பா.ஜ.க. 10 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில் திமுக - காங்கிரஸ் இடையேயும் தொகுதி உடன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில், 10 தொகுதிகளில் பா.ஜ.கவும், அதிமுக 4 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 17 இடங்களிலும் திமுக 13 இடங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து பிரிந்த பாமக புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments