வாடிக்கையாளரை தாக்கிய சோமேட்டோ டெலிவரி பாய்: உணவு ஏன் தாமதமாக வந்தது என கேட்டதால் ஆத்திரம்!

0 2250

பெங்களூருவில் சோமேட்டோ நிறுவன டெலிவரி பாய் ,வாடிக்கையாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஒப்பனை கலைஞரான ஹிட்டெஷா சந்திரானீ (hitesha chandranee)சோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் உணவு குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்ததால், உணவு ஆர்டரை ரத்து செய்யும்படி டெலிவரி பாயிடம் கேட்டார்.

ஆனால் அதனை மறுத்த டெலிவரி பாய்,  ஹிட்டெஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹிட்டெஷா மூக்கில் ரத்தம் வடிய  வடிய ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டார்.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள சோமேட்டோ, தங்களின் உள்ளூர் அதிகாரி உங்களை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி வழங்குவார் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாது உறுதியளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments