கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி - 14 மாத ஓய்வுக்கு பின் தன் முதல் வெற்றியை பதிவு செய்த ரோஜர் பெடரர்

0 1624
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி - 14 மாத ஓய்வுக்கு பின் தன் முதல் வெற்றியை பதிவு செய்த ரோஜர் பெடரர்

முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 14 மாதங்களுக்கு பின் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் தன் முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் நேரடியாக களமிறங்கிய 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர், பிரிட்டன் வீரர் டேன் இவான்சை 7-க்கு 6, 3-க்கு 6, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், தரவரிசையில் 45-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் அஸ்லான் கராட்சேவ்வை (Aslan Karatsev) 6-க்கு 7, 6-க்கு 3, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments