வரும் 26ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் -விவசாயிகள் சங்கங்கள்

0 1388
வரும் 26ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் -விவசாயிகள் சங்கங்கள்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும்  விவசாயிகளின் போராட்டம் வரும் 26ம் தேதியன்று நான்கு மாதங்களை நிறைவு செய்வதையொட்டி அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லி எல்லையருகில் நூறு நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் கடும் குளிரிலும் பனியிலும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அரசுடன் நடத்திய 11 சுற்றுப் பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இதனால் 26ம் தேதியன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

28ம் தேதி ஹோலிகா அரக்கியின் தகனம் ஹோலிப் பண்டிகையை ஒட்டி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வேளாண் சட்டங்களின் நகல்களைத் தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments