ஸ்வீடனில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நடுவழியில் சிக்கிய பேருந்து : ரயில் மோதி விபத்து

ஸ்வீடனில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நடுவழியில் சிக்கிய பேருந்து : ரயில் மோதி விபத்து
ஸ்வீடன் நாட்டில் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற பேருந்து மீது மோதிய ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கோத்தன்பர்க் என்ற இடத்தில் தண்டவாளத்தை அவசரமாகக் கடந்து செல்ல முயன்ற பேருந்து பழுதாகி தண்டவாளத்தில் நடுவில் நின்று விட்டது.
அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த ரயில் பேருந்து மீது அசுரவேகத்தில் மோதியது.
அடுத்த நொடி அந்தப் பேருந்து சுக்கல் சுக்கலாக நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இழுத்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
இந்த இருபெரும் விபத்துக்களில் ரயிலில் பயணித்த சில பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Comments