மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

0 2182
மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு திரும்பிய தன்னை சிலர் தாக்கியதாகக் கூறிய மம்தா, இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் யாரும் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாக்குதல்  சம்பவம் தொடர்பாக மாநில தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments