தென் ஆப்பிரிக்காவில் மாணவர்கள், போலீசார் இடையே கலவரம் , துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

0 715
தென் ஆப்பிரிக்காவில் மாணவர்கள், போலீசார் இடையே கலவரம் , துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்ஸ் (Wits) பல்கலைக்கழகத்தில் இனவெறி தாக்குதல் நடப்பதாகவும், கல்வி கட்டணத்தில் கூட இனவெறி பாகுபாடு காட்டப்படுவதாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் கலவரத்தில் முடிய போலீசாருக்கும், மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் மாணவர்களை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகளை கொண்டு சுட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இறந்தவர் கல்லூரி மாணவரா அல்லது போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவரா என போலீசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments