திருப்பதி ஏழுமலையான் கோவில் வேதபாடசாலையில் 57 மாணவர்களுக்கு கொரோனா

0 1541
திருப்பதி ஏழுமலையான் கோவில் வேதபாடசாலையில் 57 மாணவர்களுக்கு கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோவில் தர்மகிரி வேதபாடசாலை மாணவர்கள் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் பின்புறமுள்ள நாராயணகிரி மலையில் தர்மகிரி வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது.

இதில் பயின்று வந்த 435 மாணவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைளை மேற்கொண்டு கொரோனா இல்லை என்ற அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், மார்ச் 9 ஆம் தேதி, ரேபிட் கொரோனா விரைவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது 57 மாணவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments