பாமக வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியீடு

0 4019
பாமக வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியீடு

பாமக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 19 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் 23 இடங்கள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக 19 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, பென்னாகரத்தில் ஜி.கே. மணி, ஆத்தூரில் திலகபாமா, ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர் பாலு , சேலம் மேற்கு தொகுதியில் அருள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதுதவிர, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் திருக்கச்சூர் ஆறுமுகம், ஆற்காட்டில் இளவழகன், திருப்பத்தூரில் டி.கே. ராஜா, தருமபுரியில் வெங்கடேஸ்வரன், செஞ்சியில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

2ஆம் கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்ட்டியலில் மயிலாடுதுறையில் பழனிசாமி, விருத்தாசலத்தில் கார்த்திகேயன், சேப்பாக்கத்தில் கஸ்ஸாலி, நெய்வேலியில் ஜெகன், கும்மிடிப்பூண்டியில் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சோளிங்கரில் கிருஷ்ணன், கீழ்வேளூரில் முகுந்தன், காஞ்சிபுரத்தில் மகேஷ்குமார், மைலம் தொகுதியில் சிவக்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளதாக இரண்டாம் கட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments