அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்.! 171 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்.!

0 4134
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்.! 171 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்.!

அதிமுக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. 27 அமைச்சர்கள், 72 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக அண்மையில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, 171 தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தங்கமணி குமாரபாளையத்திலும், கே.ஏ.செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், கே.சி.கருப்பணன் பவானியிலும், உடுமலை இராதாகிருஷ்ணன் உடுமலைப்பேட்டையிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியிலும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரிலும், திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும், டாக்டர்.சி.விஜயபாஸ்கர் விராலிமலைத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மதுரை மேற்கிலும், ஆர்.பி.உதயகுமார் திருமங்கலத்திலும், ஆர்.காமராஜ் நன்னிலத்திலும், எம்.சி.சம்பத் கடலூரிலும், ஓ.எஸ்.மணியன் வேதாரண்யத்திலும், இராஜலட்சுமி சங்கரன்கோவில் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்களாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் டாக்டர் வி.சரோஜா இராசிபுரத்திலும், சேவூர் இராமச்சந்திரன் ஆரணியிலும், கே.சி.வீரமணி ஜோலார்பேட்டையிலும், பென்ஜமின் மதுரவாயலிலும், கே.பாண்டியராஜன் ஆவடியிலும், கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதியிலும், போட்டியிடுகின்றனர். 

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இம்முறை, இராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் மொத்தமுள்ள 30 பேரில், வளர்மதி, நிலோபர் கபீல், பாஸ்கரன் ஆகிய 3 அமைச்சர்கள் நீங்கலாக, 27 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதன்படி, நத்தம் விஸ்வநாதன், கு.ப.கிருஷ்ணன், B.V.ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, TKM சின்னய்யா, சோமசுந்தரம், கே.வி.இராமலிங்கம், மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கிணத்துக்கடவு தாமோதரன், பரஞ்ஜோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர், இம்முறை களம் காண்கின்றனர்.

ஆம்பூர் தொகுதியில் நஜர்முகமது, கம்பத்தில் சையதுகான் ஆகிய இரண்டு இஸ்லாமியர்களுக்கு, அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments