தேர்தல் பரப்புரையின் போது 4,5 பேர் தன்னை பின்னால் நின்று தள்ளி விட்டனர்- மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்

தேர்தல் பரப்புரையின் போது 4,5 பேர் தன்னை பின்னால் நின்று தள்ளி விட்டனர்- மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்
தேர்தல் பரப்புரையின் போது தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று அவரை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதற்காகவே நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்தார்.
இதற்காக நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, இதனை தொடர்ந்து அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பப்புரையை முடித்துவிட்டு தனது காருக்கு திரும்பும் போது 4,5 பேர் தன்னை ஆக்ரோஷத்துடன் தள்ளிவிட்டதாகவும், இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் நடைபெறும் போது காவலர்கள் ஒருவர் கூட அருகில் இல்லை எனவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
Comments