தமிழகத்தில் இன்று மேலும் 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் மேலும், 671 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 532 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் 275 பேருக்கும், கோயம்புத்தூரில் 63 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments