திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி

சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட உள்ளனர். திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுகவுக்கு மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு தொகுதிகளிலும் அதிமுகவே எதிர்த்து போட்டியிடுகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் வாணியம்பாடி, கடையநல்லூர், சிதம்பரம் தொகுதிகளிலும், அதிமுகவே எதிர் அணியில் போட்டியிடுகிறது.
இதேபோல் அவினாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் தனபாலை எதிர்த்து,திமுக கூட்டணியில் ஆதி தமிழர் பேரவை கட்சியின் தலைவரான அதியமான் போட்டியிடுகிறார்.இதேபோல் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தேன்மொழியை எதிர்த்து, திமுக கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் போட்டியிடுகிறார்.
Comments