சிவகாசி எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக அறிவிப்பு

0 6190
சிவகாசி எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக அறிவிப்பு

அதிமுக 171 தொகுதிகளுக்கான, தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கும், நடப்பு எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக அண்மையில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, 171 தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.  அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தங்கமணி குமாரபாளையத்திலும், கே.ஏ.செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், கே.சி.கருப்பணன் பவானியிலும், உடுமலை இராதாகிருஷ்ணன் உடுமலைப்பேட்டையிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இம்முறை, இராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments