அதிமுக வேட்பாளர் பட்டியலில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை

0 5819

அதிமுக 171 தொகுதிகளுக்கான, தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கும், நடப்பு எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக அண்மையில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, 171 தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. 

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தங்கமணி குமாரபாளையத்திலும், கே.ஏ.செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், கே.சி.கருப்பணன் பவானியிலும், உடுமலை இராதாகிருஷ்ணன் உடுமலைப்பேட்டையிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமுள்ள அமைச்சரவை 30 பேரில், வளர்மதி, நிலோபர் கபீல், பாஸ்கரன் ஆகிய 3 அமைச்சர்கள் நீங்கலாக, 27 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments