உத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக திராத் சிங் ராவத் பதவியேற்பு

0 932
உத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக திராத் சிங் ராவத் பதவியேற்பு

த்தரகாண்டின் புதிய முதலமைச்சராக திராத் சிங் ராவத் பொறுப்பேற்றார்.

டேராடுனில் நடந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு  பிரமாணமும் செய்து வைத்தார்.

திராத் சிங் ராவத்துடன் 3 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முன்னதாக நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் திராத் சிங் ராவத் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர் ஆளுநரை சந்தித்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்கு முன் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர ராவத்,  கட்சிக்குள் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து ராஜினாமா செய்தார்.

அந்த இடத்திற்கு தற்போது பவுரி கார்வால் தொகுதி எம்பியாக இருக்கும் திராத் சிங் ராவத் வந்துள்ளார். 6 மாதங்களுக்குள் அவர் எம்எல்ஏ ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments