தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு எப்போது ?

0 4705
தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு எப்போது ?

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி உருவானதால், திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில், கூட்டணியிலுள்ள ஐயூஎம்எல், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கழகம், ஆதித்தமிழர் பேரவை, பார்வர்டு பிளாக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியிட ஏதுவாக, இன்று இரவுக்குள்ளாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் கண்டு இறுதி செய்ய மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின் வேட்பாளர் பட்டியலை நாளை அல்லது நாளை மறு நாள் வெளியிட ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments