பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு; தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில் அண்ணா பல்கலை. அமல்படுத்தியது ஏன்? - உயர்நீதிமன்றம்

0 2269
மாநில அரசு அமல்படுத்தாத நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது ஏன்? மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் எம்.டெக் படிப்பில் ஏன் அமல்படுத்தியது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 10 சதவித இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றார்.

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் எவ்வாறு இயங்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றாமல், தங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளை, அண்ணா பல்கலைக்கழகம் சந்திக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments