பிரச்சார கூட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் மக்களை அழைத்து வந்தால் நடவடிக்கை - போக்குவரத்து ஆணையர்

0 289

பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை தவிர, சரக்கு வாகனங்களை பயன்படுத்தினால் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அனுமதி சீட்டு மற்றும் பதிவு சான்றை மீறிய குற்றத்திற்காக வாகனம் சிறைபிடிக்கப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும் எனவும், உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு உத்தரவின் படி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments