கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனிதத்தன்மையற்ற செயல்- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

0 1579
கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனிதத்தன்மையற்ற செயல்- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

ழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத்தன்மையற்ற செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

அந்த வழக்குகள் தொடர்பான விசாரணையில் பாதாள சாக்கடைகளிலும், கழிவு நீர் தொட்டிகளிலும் மனிதர்கள் சுத்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறதா?இல்லையா என்பது குறித்து மாநில அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மனிதத்தன்மையற்ற இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments