புதுச்சேரியிலும் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்

0 1728
தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்

புதுச்சேரியிலும் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் மாநிலக் கட்சியாக உள்ள தேமுதிகவுக்குத் தேர்தல் ஆணையம் முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments