"தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்த உறுதிபூண்டுள்ளோம்"- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

0 1081
"தேர்தலில் எந்த முறைகேடும் நடக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன"- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

மிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு, போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021" என்ற தலைப்பில், பிஐபி (PIB) சென்னையுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் தயாரித்து தேர்தல் தகவல் கையேட்டை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்களிக்க கால அவகாசம் கேட்டுள்ள கோரிக்கை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments