சாதிவாரிக் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிடத் திட்டம் இல்லை - மத்திய அரசு

0 846

சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய தரவுகளை வெளியிடும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சமூக, பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தப்பட்டது. சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகள் வகைப்படுத்தலுக்காகச் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிடும் எந்தத் திட்டமும் இல்லை என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைத் தவிரப் பிற சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவதில்லை என 1950ஆம் ஆண்டு கொள்கை முடிவெடுக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments