படையே நடுங்கும் பாம்பில் ஸ்மைலி..! இளைஞரின் செயலால் நிகழ்ந்த அதிசயம்

0 2374
படையே நடுங்கும் பாம்பில் ஸ்மைலி..! இளைஞரின் செயலால் நிகழ்ந்த அதிசயம்

பார்ப்போர் அச்சம் கொள்ளும் உயிரினமான பாம்பு தனது உடலில் ஸ்மைலி இமோஜிகளை கொண்ட காராணத்தினால் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனாலும், பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கும் சில ஆர்வலர்களும் உள்ளனர். தீண்டி கொன்றுவிடுமோ என்ற அச்சம் தரும் பாம்பு தனது உடலில் சிரிக்கும் முகத்தை கொண்டிருந்தால் எப்படி இருக்கும்..? இயற்கைக்கு சவால் விட்டு தனது முயற்சியால் அச்சம் கொள்ளும் பாம்பின் உடலில் ஸ்மைலியை படைத்துள்ளார் 19 வயதான இளைஞர் ஒருவர்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜஸ்டின் கோபில்கா (Justin Kobylka) பாம்பு உள்ளிட்டவைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதுடன் அவற்றை விற்பனை செய்தும் வந்துள்ளார். பாம்புகள் மீது அதீத ஆர்வம் கொண்ட ஜஸ்டின் வித்யாசமான நிறங்களிலும், வடிவங்களிலும் அவற்றை இனபெருக்கம் செய்ய முயன்றுள்ளார். சுமார் 8 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு தனது பரிசோதனையில் வெற்றியும் கண்டுள்ளார். நிறமற்ற வெள்ளை மலைப்பாம்பின் உடலில் மரபியல் பிறழ்ச்சிகளை ஏற்பட செய்த ஜஸ்டின் புது வகையான பாம்பை உருவாக்கியுள்ளார்.

மலைப்பாம்பின் உடலில் தங்கம்போன்று மின்னும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்டு வர முயன்ற ஜஸ்டினுக்கு அதிசயம் நிகழ்ந்துள்ளது. பாம்பின் உடலில் மூன்று சிரிக்கும் இமோஜி போன்ற முகங்கள் உருவாகியுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த ஜஸ்டின் உடலில் சிரிக்கும் இமோஜி கொண்ட பாம்பின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்தார்.

பொதுவாக உயிரினங்களின் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஜஸ்டின் ஆரம்பத்தில் இந்த ஸ்மைலி பாம்பை விற்பனை செய்யும் முடிவுக்கு வரவில்லை என்றார். ஆனால், தற்பொழுது 3 ஸ்மைலி இமோஜி கொண்ட மலைப்பாம்பை இந்திய ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

சாதாரணமாக ஒரு விலங்கை 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்த நிலையில் ஒரே ஒரு பாம்பு ஸ்மைலி இமோஜியால் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விலை போது ஜஸ்டினுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments