இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய அசாருதீன்... கானா பாட்டு பாடி போலீஸாருக்கு சவால்; கடுப்பான கமிஷனர் எடுத்த அதிரடி!

0 91437
ரவுடியின் பிறந்த நாள் விழா

காவல்துறைக்கு சவால் விடும் வகையில் கானா பாடல் பாடி பிறந்த நாள் கொண்டாடிய சேலம் ரவுடி அசாருதீனை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவனின் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.

சேலம் அஸ்தம்பட்டி அருகேயுள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவன் அசாருதீன் (வயது 36) . பிரபல ரவுடியான இவன் மீது பலாத்காரம் , வழிப்பறி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளன. சேலம் அழகாபுரம் பகுதியில் அழகு நிலையம் ஒன்றுக்குள் புகுந்து ரவுடி அசாருதீன் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் , சிறையிலிருந்து வெளியில் வந்த ரவுடி அசாருதீன் சிறிது காலம் அமைதியாக இருந்தான். ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பது போல ரவுடி அசாருதீன் தன் செகண்ட் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கினான். மீண்டும் தன் ஆட்களை ஒருங்கிணைத்து ரவுடிப்படையை உருவாக்கி, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடத் தொடங்கினான் சேலம் சுற்று வட்டாரத்தில் அசாருதீனை மீறி எதுவும் நடக்காது என்கிற நிலை உருவானது.image

இந்த நிலையில் கடந்த வாரம் அசாருதீன் தனது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினான். இதற்கான வீராணம் காட்டுப் பகுதியில் அசாருதீன் உள்ளிட்ட ரவுடிகள் ஒன்றாக கூடினர். பிறந்தநாள் விழாவுக்கு வந்த பிற குட்டி ரவுடிகள் தலைமை ரவுடி அசாருதீனுக்கு ஆளுயர மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது, கானா பாடலுக்கு ஆட்டமாடி குட்டி ரவுடிகள் அசாருதீனை மகிழ வைத்தனர். தொடர்ந்த ரவுடி அசாருதீனை கேக் வெட்ட வைத்து கேக் ஊட்டி மகிழ்ந்தனர். விழாவுக்கு வந்திருந்த குட்டி ரவுடி ஒருவன், கானா பாடல் பாடி அசாருதீனை உற்சாகப்படுத்தினான்.

பாட்டில், 'அசார் அண்ணனை தொட்டா, தலையை வெட்டி கையில் பிடிச்சுக்குவோம் ' என்பது போன்ற மோசமான வரிகள் இடம் பெற்றிருந்தன. அசாருதீன் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் கானா பாடல்கள் இடம் பெற்ற வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமாரும் இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக , ரவுடி அசாருதீன் மற்றும் கானா பாடல் பாடிய வாலிபரையும், பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரவுடிகளையும் பிடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, வீராணம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை அசாருதீனை கைது செய்தனர். கானா பாடிய வாலிபரையும் மற்றும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களையும் பிற ரவுடிகளையும் தேடி வருகின்றனர். போலீஸார் தங்கள் மீது செம கடுப்பில் இருப்பதை அறிந்த ரவுடிகள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்களாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments