தகுதி உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட உதவ பாஜக எம்பிக்கள், நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

0 741
தகுதி உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட உதவ பாஜக எம்பிக்கள், நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

குதி உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட உதவுமாறு பாஜக எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தாக்கத்தால் நடைபெறாமல் இருந்த பாஜக எம்பிக்கள் கூட்டம் சுமார் ஓராண்டிற்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அதில் பேசிய மோடி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 இடங்களில், 75 வார கால நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் 12 ஆம் தேதி துவங்க உள்ள இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு எம்பிக்களை மோடி அறிவுறுத்தியதாகவும் ஜோஷி கூறினார்.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments