கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க எதிர்ப்பு : அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

0 1326
கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க எதிர்ப்பு : அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜூனனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் முன்பு, திரண்ட 50க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என முழக்கமிட்டனர்.

கட்சியில் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறி, ராஜினாமா கடிதத்துடன் நிர்வாகிகள் திரண்டனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பட்டியலில் கோவை தெற்கு தொகுதியும் இருப்பதால் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments