கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட உள்ள 85 இடங்களில் 83 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

0 652
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட உள்ள 85 இடங்களில் 83 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியில், மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட உள்ள 85 இடங்களில், 83 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நடிகர் முகேஷுக்கு மீண்டும் கொல்லம் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. 83 வேட்பாளர்களில் 74 பேர் கட்சி உறுப்பினர்களும் எஞ்சியவர்கள் சுயேச்சைகளுமாவர்.

அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும். தற்போது எம்எல்ஏ வாக இருக்கும் 33 பேருக்கும், அமைச்சர்கள் 5 பேருக்கும் வாய்ப்பளிக்கவில்லை.

வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் மாநில குழு தற்காலிக செயலாளர் விஜயராகவன் திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments