பாலியல் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு

0 1170
பாலியல் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு

பாலியல் புகாரில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி, தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நீர் வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெண்ணுடன் தான் இருப்பது போன்று வெளியான ஆபாச வீடியோ, 100 சதவீதம் போலியானது என ரமேஷ் ஜர்கிகோலி கூறியுள்ளார்.

தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments