சீனாவின் சோங் சான்சன் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

0 993
சீனாவின் சோங் சான்சன் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

சீனாவின் சோங் சான்சன் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

சீனாவில் நோங்பு ஸ்பிரிங் பாட்டில் தண்ணீர் நிறுவனத்தின் அதிபர் சோங் சான்சன், வான்டாய் மருந்து நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து அவரது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில் ஹுருண் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சோங் சான்சன் ஆசியாவில் முதலிடத்திலும், உலக அளவில் ஏழாம் இடத்திலும் உள்ளார்.

இதனால் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் முகேஷ் அம்பானி இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments