சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமமுக - தேமுதிக பேச்சுவார்த்தை

0 6736
v

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, அமமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பனை சந்தித்து  கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments