புதுச்சேரி தே.ஜ.கூட்டணியில் அதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு என பாஜக தகவல்

0 2432
புதுச்சேரி தே.ஜ.கூட்டணியில் அதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு என பாஜக தகவல்

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 10 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பின்னர், என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே உடன்பாடு எட்டப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில், 10 தொகுதிகளில் பா.ஜ.கவும், அதிமுக 4 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments