5 மாநில சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி: பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பு என தகவல்

பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பு என தகவல்
தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாநிலங்களில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் நிலையில், வரிகளை குறைக்கலாமா என மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு ஆண்டொன்றுக்கு 5 புள்ளி 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. விலையை குறைக்க ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வந்து, அதிகபட்ச வரியான 28 சதவிகிதத்தை விதித்தாலும், 2.5 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இழப்பை எதிர்கொள்ளப் போவது யார் என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
Comments