முதற்கட்டமாக 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக

முதற்கட்டமாக 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அமமுக
வருகிற சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் 15 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
வருகிற 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அமமுக சார்பில் 15 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது
அதன்படி, பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தமிழனும் போட்டியிடுகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் எம்.ரெங்கசாமியும், ராசிபுரத்தில் எஸ்.அன்பழகனும் களம் காண்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் ஆர்.மனோகரன், மடத்துக்குளத்தில் சி.சண்முகவேலு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Comments