துனிசியாவில் நடுக்கடலில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து: 39 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

0 770
துனிசியாவில் நடுக்கடலில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து: 39 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

துனிசியாவில் அகதிகள் வந்த 2 படகுகள் எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் மூழ்கியதில் 39பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய தரைக்கடல் பகுதியை கடந்து இத்தாலியில் உள்ள Lampedusa தீவுக்கு படகுகள் மூலம்  ஏராளமான அகதிகள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகுகள் துறைமுக நகரமான Sfax அருகே திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதுபற்றி தகவல் அறிந்த துனிசியா பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மீட்பு படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 165 அகதிகளை பத்திரமாக மீட்டனர். மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments