உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி தீவிரம்

0 771
உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி இன்று நடைபெறுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி இன்று நடைபெறுகிறது.

அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது பாஜக எம்எல்ஏக்கள் பலர் குற்றச்சாட்டு எழுப்பியதை அடுத்து கட்சி மேலிடம் உத்தரகாண்டிற்கு பார்வையாளர்களை அனுப்பி நிலவரத்தை கேட்டறிந்தது.

அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை திரிவேந்திர சிங் ராவத் சந்தித்துப் பேசிய பினனர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments