உலக அளவில் 85.20 கோடி பெண்கள் 15 வயதில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

0 1210
உலக அளவில் 85.20 கோடி பெண்கள் 15 வயதில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

உலகில் மூன்றில் ஒரு பெண்  தன் வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறத்தல்களை அனுபவிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெருந்தொற்று பரவலின் போது பாலியல் துன்புறுத்தல் அதிகளவில் காணப்பட்டதாக ஆய்வு முடிவில் தெரிய வந்து உள்ளது.

உலக அளவில் 85 கோடியே 20 லட்சம் பெண்கள் தங்கள் 15 வயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு உள்ளது.

உலகளவில் கிரிபாட்டி, பிஜி, பப்புவா நியூ கினியா, வங்காளதேசம், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் அதிகளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் காணப்படுவதாக கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments