மாமியார் மருமகள் மாறி மாறி ஊட்டினால் சாப்பாடு - பிரியாணி ஃப்ரீ..! திகிலூட்டும் ஓட்டல்காரர்

0 14596
மாமியார் மருமகள் மாறி மாறி ஊட்டினால் சாப்பாடு - பிரியாணி ஃப்ரீ..! திகிலூட்டும் ஓட்டல்காரர்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிவரும் மாமியார் மருமகள் உறவை மேம்படுத்தும் வகையில், ஈரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்று, மாறி மாறி உணவு ஊட்டும் மாமியார் மற்றும் மருமகளுக்கு சாப்பாடு, பிரியாணி உள்ளிட்ட அனைத்து வகையான உணவுகளும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்கின்றது என்பதை விவேக்கின் இந்த காமெடி கலகலப்பான காட்சியாகி இருக்கும். சொந்தத்தில் வந்த மருமகளாக இருந்தாலும் சரி, அசலில் வந்த மருமகளாக இருந்தாலும் சரி, மாமியார் பேச்சை மீறினால் அங்கே மோதல் ஆரம்பமாகும்..!

அதன் பின்னர் மருமகள் தொட்டதெல்லாம் குற்றம் என பட்டியல் நீளும், மாமியார் சொல்வதெல்லாம் பொய் என்று மருமகள் நீட்டி முழக்க, கண்ணீர் வடிக்க சீரியசாக ஒவ்வொரு வீட்டிலும் நிஜ சீரியல் அரங்கேறுவது வாடிக்கையான ஒன்று..!

இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாமியார் மருமகள் உறவை வலுப்படுத்த ஈரோட்டை சேர்ந்த வேதாஸ் என்ற ஓட்டல் உரிமையாளர் பூபதி, அன்பைக் கொட்டி, பாசம் கொட்டி, மாமியாரும், மருமகளும் ஒருவருக்கொருவர் உணவூட்டும் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த ஓட்டலுக்கு செல்லும் மாமியாரும் மருமகளும் சாப்பிடும் முழு உணவையும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி வாயில் ஊட்டிவிட வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் சாப்பிடும் அத்தனை உணவுகளுக்கும் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குமாரபாளையத்தை சேர்ந்த மாமியார் ஒருவரும், மருமகளும் மட்டன் பிரியாணியையும், கறித் தொக்கையும் அன்பாக ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டியும், உண்டும் மகிழ்ந்தனர்.

இப்படி ஒரு அறிவிப்பை முகநூலில் பார்த்து தாங்கள் குமாரபாளையத்தில் புறப்பட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்..!

அந்த ஓட்டலில் உள்ள உணவுவகைகளின் ருசி மனதுக்கு நிறைவு தருகிறதோ இல்லையோ, இங்கு வந்து உணவை மாறி மாறி ஊட்டி மகிழும் மாமியார் மருமகள் உறவு மனதுக்கு நிறைவானதாக மாறிப்போகின்றது..!

தண்டவாளத்துல சிக்கினால் கூட ஏதாவது தந்திரம் செய்து தப்பிச்சிரலாம், ஆனால் மாமியார் மருமகள் சண்டை வர்ரப்போ சிக்கினால் கண்டிப்பா சிதறல் தான் என்று தெரிந்தும், உறவுகள் மேம்பட இந்த போட்டியை தைரியத்துடன் முன்னெடுத்துள்ளார் பூபதி ((பாராட்டுக்குரியவர்..))!

அதே நேரத்தில் ஊட்டும் வரை உறவை சாப்பாட்டால் வலுப்படுத்திய கையோடு அவர்களுக்கு இரு விதைப் பந்துகளையும் வழங்கி கவுரவிப்பது இந்த விருந்தின் ஹைலைட் ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments