திமுக கூட்டணியில் எந்தத் தொகுதி எந்தக் கட்சிக்கு ஒதுக்கீடு? முழு பட்டியலையும் இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்

0 3570
திமுக கூட்டணியில் எந்தத் தொகுதி எந்தக் கட்சிக்கு ஒதுக்கீடு? முழு பட்டியலையும் இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்

தி.மு.க.  கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படுகிறது.

திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு, தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியனவற்றிற்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 47 இடங்கள் தவிர, 187 இடங்களில், உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இதில், 174 தொகுதிகளில், திமுக போட்டியிடுகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 இடங்களிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் விடுதலை கழகம், ஆதித்தமிழர் பேரவை ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் என 13 கூட்டணி வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி தவிர மற்ற கட்சிகளுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்றைக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments