ரூ. 20க்கு சாம்பார், ரசம், இருவகைப் பொரியலுடன் அளவில்லா சாப்பாடு வழங்கி வரும் உணவகம்.. குவியும் பாராட்டு

0 59222
திருப்பூரில் ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு என்று 20 ரூபாய்க்கு சாம்பார், ரசம், இருவகைப் பொரியலுடன் அளவில்லா சாப்பாடு வழங்கி வரும் உணவகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருப்பூரில் ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு என்று 20 ரூபாய்க்கு சாம்பார், ரசம், இருவகைப் பொரியலுடன் அளவில்லா சாப்பாடு வழங்கி வரும் உணவகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அணைப்புதூரில் ஏகேஆர் குப்புசாமி என்பவருக்குச் சொந்தமாக பெட்ரோல் பங்க், பின்னலாடை நிறுவனம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

தன்னிடம் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்க முடிவு செய்த ஏகேஆர் குப்புசாமி, சிறிய அளவில் உணவகம் தொடங்கினார்.

20 ரூபாய்க்கு சாம்பார், ரசம், மோர், இருவகைப் பொரியலுடன் அளவில்லா சாப்பாடு இங்கு வழங்கப்படுகிறது. நாளடைவில் இதுகுறித்து அறிந்த மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எனப் பலரும் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments