கடன்கார காதலன் நடிகர் ஆர்யா சாட்டிங்கில் மிரட்டல்..! ஈழ தமிழ்ப் பெண் ஆடியோ

0 28005
கடன்கார காதலன் நடிகர் ஆர்யா சாட்டிங்கில் மிரட்டல்..! ஈழ தமிழ்ப் பெண் ஆடியோ

தன் மீதான் பண மோசடி புகாரை வாபஸ் வாங்காவிட்டால், வீட்டிற்கு ஆள் அனுப்புவேன் என்று சாட்டிங் மூலம், சீட்டிங் நடிகர் ஆர்யா மிரட்டுவதாக ஈழத்தமிழ் பெண் பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார். சாட்டிங் ஹிஸ்டரியால் அம்பலமான கடன்கார காதலன் ஆர்யாவின் வில்லத்தனம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் லவ்வர் பாயாக வலம் வந்த நடிகர் ஆர்யா, தற்போது இயக்குனர் ப.ரஞ்சித்தின் இயக்கத்தில் சர்ப்பட்டா பரம்பரை என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

சொந்தமாக படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்ட நடிகர் ஆர்யா, 2018 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் தொடர்பில் இருந்த, ஜெர்மனியில் வசிக்கின்ற சுகாதாரத்துறை அதிகாரியான ஈழத்தமிழ் பெண் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி 70 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், இந்திய குடியரசுத் தலைவர், மற்றும் பிரதமருக்கு புகார் மனுவை அனுப்பி வைத்தார். ஆர்யா மீதான புகாரை விசாரிக்க தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி சரவண வேல்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். பெருநகர சென்னை காவல்துறையினர் ஆர்யா மீதான மோசடி புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீட்டிங் புகாருக்குள்ளான ஆர்யா, சாட்டிங் மூலம் தன் மீதான புகாரை வாபஸ் வாங்கவில்லை யென்றால் வீட்டுக்கு தனது ஆட்களை அனுப்புவேன் என்று மிரட்டியதோடு, தான் காதலித்து ஏமாற்றியது குறித்தும், பணம் வாங்கி கொடுக்க மறுப்பது குறித்து தாய் மற்றும் மனைவி சாயிஷாவிடம் தெரிவித்ததால் பணம் தரமுடியாது என்றும் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று ஆணவமாக ஆர்யா செய்த சாட்டிங்கையும் பணத்தை பறிகொடுத்த பெண் ஆடியோவில் தெரிவித்துள்ளார்

முன்னதாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் பங்கேற்ற சமயத்தில் ஆர்யாவிடம் செய்த சாட்டிங் ஹிஷ்டரிகளையும் ஈழப்பெண் வெளியிட்டுள்ளார். அதில் பிரபல ஹீரோ நீ, என்னிடம் பிச்சை கேட்கிறாய் என அந்த பெண் கேள்வி எழுப்ப தனக்கு நிறைய கடன்கள் இருப்பதாகவும் அதற்காக தான் இந்த ஷோவில் நடிப்பதாகவும் தெரிவித்த ஆர்யா, நீயும் கொஞ்சம் பிச்சை போட்டு கடனை அடைக்க உதவுமாறும், தனது பெயரில் அனுப்பினால் வெஸ்டர்ன் மணி டிரான்ஸ்பருக்கு சென்று எடுப்பது கஷ்டமாக இருக்கும் எனவே தனது உதவியாளர் பெயரில் பணம் அனுப்ப கூறி இருக்கிறார் ஆர்யா

அதே போல திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு சாயிஷாவை திருமணம் செய்வது குறித்து கேட்ட போதும் , அப்பா எடுத்த முடிவு என்று நழுவிய ஆர்யா, எனக்கு கடனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்தால் சாயிஷா திருமணத்தை தான் உடனடியாக நிறுத்தி விடுவதாகவும் ஆசை வார்த்தைகளை சாட்டிங்கில் சீட்டிங் புகாருக்குள்ளான ஆர்யா அள்ளி விட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது..!

இந்த புகார் குறித்து ஆர்யா தரப்பில் விசாரித்த போது எந்த ஒரு விளக்கமும் தெரிவிக்கவில்லை. படத்துல நடிக்க தெரியுதோ இல்லையோ நிஜத்தில நடிப்புல மிஞ்சி விடுகிறார்கள் அதே நேரத்தில் சினிமாவின் ஹீரோ வேஷம் போடும் ஆர்யா போன்ற சில நடிகர்கள் நிஜத்தில் வில்லத்தனம் செய்வது திரையுலகின் சாபக்கேடு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments