டெல்லியில் 500 இடங்களில் தேசிய கொடிக் கம்பங்கள் அமைக்கப்படும்: டெல்லி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தகவல்

0 967
டெல்லியில் 500 இடங்களில் தேசிய கொடிக் கம்பங்கள் அமைக்கப்படும்: டெல்லி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தகவல்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி 500 இடங்களில் தேசியக் கொடி கம்பங்கள் அமைக்கப்படுமென டெல்லி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் மணிஷ் சிசோடியா தாக்கல் செய்தார். இதில் வருகிற 12-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி வரை தேசப்பற்று வாரங்கள் என 75 வாரங்கள் கொண்டாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 45 கோடி ரூபாய் செலவில் 500 பிரமாண்ட தேசியக்கொடி கம்பங்கள் நிறுவப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இளைஞர்களிடையே தேசபக்தியை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் அம்பேத்கர் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments