பங்குனி மாத பூஜைக்காக 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில்..

0 1582
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது.

அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாத பூஜையின் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

27- ஆம் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28- ஆம் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும், மாத பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments