தி.மு.க கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி?... அறிவிக்கிறார் ஸ்டாலின்

0 4987
தி.மு.க கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி?... அறிவிக்கிறார் ஸ்டாலின்

திமுக கூட்டணியில் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகளை எந்தெந்த கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், தாங்கள் கேட்ட 3 தொகுதிகளையும் கொடுத்து விட்டதாக கூறினார்.

எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும், ஐயூஎம்எல் வேட்பாளர்கள் யார் யார் என்பதை வியாழக்கிழமை அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடையநல்லூர். வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments