ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து தேமுதிகவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது - கமல்

0 3216
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து தேமுதிகவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது - கமல்

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன், தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்ட பின் பேசிய கமல், நடப்பு சட்டமன்ற தேர்தலில் தங்கள் தலைமையிலான அணியே முதல் அணி என்றார்.

கூட்டணி தலைவர் மட்டுமல்ல, முதல்வர் வேட்பாளரும் கமல் தான் என ச.ம.க தலைவர் சரத்குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து, கமல் தலைமையிலான கூட்டணி, தமிழக விடிவெள்ளியாக விளங்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments