15 ஆண்டுகளாக ஹேர்கட் இல்லை; 6.3 அடி நீளமான கூந்தல் கொண்ட ஜப்பானிய பெண்..!

15 ஆண்டுகளாக ஹேர்கட் இல்லை; 6.3 அடி நீளமான கூந்தல் கொண்ட ஜப்பானிய பெண்..!
காவியங்களிலும் காப்பியங்களிலும் மட்டுமல்ல நிஜத்திலும் ஆறடி கூந்தல் கொண்ட பெண்ணை பார்க்கலாம் என வியக்க வைக்கிறார் ரின் காம்பே (Rin Kambe).
கடந்த 2010 ஆம் ஆண்டு 3டி அனிமேசனில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட படமான டாங்கில்டு படத்தில் வரும் இளவரசியான ராபன்ஸலுக்கு நீண்ட கூந்தல் இருக்கும்.
அந்த கதாபாத்திரத்துடன் ரின்னை ஒப்பிட்டு இவரை ஜப்பானிய ராபன்ஸல் (Rapunzel ) என நெட்டிசன்கள் அழைக்கின்றனர். 35 வயதான ரின், கடந்த 15 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்த்துவந்ததால் தற்போது 6 அடி 3 அங்குலத்திற்கு அழகான கூந்தல் உள்ளது.
மாடலும், நடனக்கலைஞருமான ரன் காம்பே, குங்குமப்பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யையையே கூந்தலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்.
Comments